;
Athirady Tamil News

இஷாரா செவ்வந்திக்கு படகோட்டிய யாழ் இளைஞன் கைது

0

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் படகின் உதவியாளராகச் செயற்பட்ட மற்றுமொருவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் இதுவரையில் 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கைதானவர்களில் சிலர் தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.