;
Athirady Tamil News

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 02பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.…

கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய்க்கு நொடிப்பொழுதில் நடந்த துயரம்

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர். எப்பாவல பொலிஸ் பிரிவின் ரொட்டவெவ காட்டுப்பகுதியில் நேற்று (8) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை…

நூலகத்தின் பெண் அதிகாரி தொடர்பில் போலி தகவல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு பொது நூலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கைப்பையில் சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு…

இலங்கையிலிருந்து சென்ற கப்பலில் பாரிய தீப்பரவல் ; நால்வர் மாயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை…

யாழில் கரையொதுங்கிய திமிங்கிலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமே இறந்து கரையொதுங்கியது.…

180 மீட்டர் தூரத்திற்காக ஓலா பைக்கை புக் செய்த இளம்பெண்.., அவர் கூறிய வியக்க வைக்கும்…

பெண் ஒருவர் 180 மீட்டர் தூரம் செல்வதற்காக ஓலா பைக்கை புக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ தற்போதைய காலங்களில் ஒரு இடம் விட்டு மறுபுறம் செல்வதற்கு கார் மற்றும் பைக் டாக்சிகளை புக் செய்கிறார்கள்.…

70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு 95 வயதில் திருமணம்! கொண்டாடிய ஊர் மக்கள்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 95 வயது முதியவர், பாரம்பரிய முறைப்படி தனது துணையை மணந்தார். நேரடி உறவில் வாழ்ந்த ஜோடி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ரி பஞ்சாயத்தின் கலந்தர் கிராமத்தைச் சேர்ந்த ராம அங்காரி (95) மற்றும்…

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டிபிஎஸ்) என்பது, போா் அல்லது இயற்கை…

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த 5 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் தங்கள் படைகளை நோக்கி முன்னேறி வந்த சிலரை எச்சரிக்கும்…

மைதேயி இன முக்கிய தலைவர் கைது எதிரொலி: மணிப்பூரில் கலவரம்; இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் முக்கிய மெய்தி இனத் தலைவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து போராட்டக்காரர்கள் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (ஏடி) என்ற மெய்தி அமைப்பின்…

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; வீட்டின் முன் சடலமாக மீட்கபட்ட 22 வயது இளைஞன்

வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞரின் குறித்த சடலம் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனை காணவில்லை…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்துள்ளாா். பல்வேறு…

CIDயில் ஆஜரான முன்னாள் எம்.பி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சுங்கத்தில் இருந்து முறையான ஆய்வுகள் இல்லாமல் விடுவிக்கப்பட்ட ஒரு கொள்கலன் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம்…

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு திடீர் இடமாற்றம்

உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இந்த நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக…

திடீரென கைதான 24 வயது சமையல்காரர் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு - தலங்கமை பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்களுடன் சமையல்காரர் ஒருவர் தலங்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்…

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்”: யாழ். மாவட்டச்…

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என, காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக திண்மக்…

நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) தேர்த்திருவிழா இன்று (09.06.2025) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

எலான் மஸ்க்குடன் உறவு முறிந்தது..! -டிரம்ப்

வாஷிங்டன்: எலான் மஸ்க் ஜனநாயக கட்சியினருக்கு நிதியுதவி அளித்து ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டொனால்டு டிரம்ப்…

பக்கத்து வீட்டு திருமணத்தில் வைத்த DJ இசை.., சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பக்கத்து வீட்டு திருமணத்தில் வைத்த DJ இசையால் 15 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிரிழப்பு இந்திய மாநிலமான பீகார், ரஷித்பூராவை சேர்ந்தவர் பிங்கி. இவரது அருகில் உள்ள வீட்டில் நடைபெற்ற…

தமிழர் பகுதியில் காய்த்து குழுங்கிய பேரீச்ச மரங்கள்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்கள், பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இலங்கையிலும்…

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது. ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றாக மாறியதாக உக்ரைன் ராணுவம்…

குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு மற்றும் மீள் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்…

இந்தியாவில் 6,000-ஐ கடந்துள்ள கொரோனா தொற்று ; அறுவர் பலி

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பரவிவரும் கொரோனா தொற்று…

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டது.-சம்மாந்துறை…

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம்…

அனுராதபுர சிறை அதிகாரி கைது

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் .

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்பிய யாழ். சட்டத்தரணி ஒருவர் கைது

யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படததை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், தனது…

கொழும்பில் காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்திய மருந்தக உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை

கொழும்பு தெஹிவளையில் உள்ள ஒரு மருந்தகத்தில் விற்பனைக்காக காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்தியதற்காக ஒரு தொழிலதிபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) கூற்றுப்படி,…

வாகன உறுதிப்படுத்தல் வலைத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு நிகழ்நிலை வசதி குறித்து இலங்கை சுங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்கு…

டிரம்ப் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! லாஸ் ஏஞ்சலீஸில் அமைதியின்மை

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, தொடர்ந்து நாடுகடத்தி வருகிறது. இந்த…

அமெரிக்க பயணத்திற்கு முன்னர் சர்வதேச பயணிகள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்

அமெரிக்காவிற்குச் செல்லும் சர்வதேச பயணிகள் தங்கள் டிஜிட்டல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட புகைப்படங்கள் உட்பட முக்கியமான தரவுகள் அனைத்தையும் நீக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். உரிய அனுமதி இல்லாமலே ஜனாதிபதி ட்ரம்பின் புதுப்பிக்கப்பட்ட…

எலோன் மஸ்க் மேல் உள்ள கோபத்தால் டெஸ்லா காரை விற்கும் ட்ரம்ப்? பரவும் தகவல்

உலகப் பணக்காரர் எலோன் மஸ்க் உடனான மோதலால், டெஸ்லா காரை டொனால்ட் ட்ரம்ப் விற்க பரிசீலிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. டெஸ்லாவின் பங்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான மோதல் காரணமாக, எலோன் மஸ்க்கின் டெஸ்லாவின் பங்கு 14 சதவீதம்…

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 20 வீதத்தால் வீழ்ச்சி

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 20% சரிவை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மீதான ட்ரம்பின் வரி விதிப்பை தொடர்ந்து அந்நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவு சரிந்துள்ளதாக…

மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறையிலிருந்து, தெருநாய் பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மோவ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலிருந்து,…

ஏரியில் குளிக்க சென்ற பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலாஎல்ல ஏரியில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம்…