;
Athirady Tamil News

சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை !!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்று கூறி அவரை சாடிய சரத் வீரசேகர எம்.பிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்…

மாணவர் மீது தாக்குதல்: கைதான 7 கல்லூரி மாணவர்களுக்கு 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி-…

சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். மாநிலக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அவர் கல்லூரி செல்வதற்காக வடபழனி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு பிளாஸ்டிக் பைப்புகளுடன் வந்த…

கயத்தாறு அருகே 600 கிலோ சிக்கியது: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கில் முக்கிய…

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ராஜபிரபு, பிரெட்ரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை சோதனை…

வனப் பாதுகாப்புக்கான வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்- அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது!!

வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமையில் வனப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் கிண்டி முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை ரீதியான ஆய்வுகள்…

நிலவில் சந்திரயான் 3- இஸ்ரோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம், நிலவில் தடம் பதித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோவை பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.…

சந்திரயான் 3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது – பிரதமர் மோடி…

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை…

சூடானின் உள்நாட்டு போர் – பட்டினியால் 500 சிறார்கள் மரணம் !!

கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதோடு, இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள் என சூடானின், 'சேவ் தி சில்ட்ரன்' என்ற அமைப்பின் இயக்குனர் ஆரிப் நுார் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆபிரிக்க…

சந்திரயான் 3 வெற்றி – டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை…

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வை மேற்கொள்ளும் இந்தியா !!

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது ஆய்வை தொடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14 ஆம் திகதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, இன்று(23) மாலை…

நிலவில் சந்திரயான் 3.. வெற்றிக்கு துணை நின்ற நிறுவனங்கள்!!!

கடந்த ஜூலை 14 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான்-3 விண்கலம். இஸ்ரோ திட்டமிட்டபடி, இதன் லேண்டர் இன்று நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக…

உக்ரைனுக்கு அமெரிக்க அளித்த ராணுவ படகை சுட்டு வீழ்த்திய ரஷிய படை!!

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ரஷியா ஏவுகணைகளால் தாக்கி அழித்து வருகிறது. உலக நாடுகள் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள்…

இஸ்ரோவின் முக்கிய மிஷன்களின் திட்ட இயக்குனர்கள் – தமிழன் எப்பவும் வெயிட்டு தான்!!

விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. 60-களில் விண்வெளி துறையில், இந்தியாவை பார்த்து உலக நாடுகள் சிரித்த நிலையில், இன்று இஸ்ரோவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. விண்வெளியில்…

இன்னோர் அரசாங்கம் அமையும்!!

பாராளுமன்ற செயலாளர் நாயகமோ அல்லது பிரதி செயலாளரோ இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டால் அடுத்து இன்னோர் அரசாங்கம் அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சமிந்த விஜேசிறி பாராளுமன்ற செயலாளருக்கு விடுத்துள்ள…

தனியாரிடம் மின்சாரம் கொள்வனவு!!

மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தென்…

மெக்சிகோ வழிப்பறியில் இந்தியர் சுட்டுக்கொலை: ரூ.8 லட்சம் கொள்ளை!!

வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நாடு மெக்சிகோ. இதன் தலைநகரம் மெக்சிகோ சிட்டி. உலகில் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஆள் கடத்தல், துப்பாக்கிச்சூடு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது…

சந்திரயான் 3 வெற்றி – ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!!

அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன. ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை. தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென்…

ரேஸ் வச்சுக்கலாமா? காரை முந்தும் போது கோர விபத்து.. கார் பந்தய வீராங்கனை பலி..!!!

அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை சேர்ந்த மாநிலம் இண்டியானா. இதன் தலைநகரம் இண்டியானாபொலிஸ். இந்நகரை சேர்ந்தவர் ஆஷ்லியா ஆல்பர்ட்ஸன் (24). ஆஷ்லியா கார் பந்தயத்தில் பிரபலமானவர். தனது 10வது வயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர்…

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கும் பணி தொடக்கம்!!

நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கி இன்று சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே, நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அந்தப்…

ஹே சூப்பர் பா.. சந்திரயான்-3 முயற்சியை பாராட்டி இந்தியாவை புகழும் பாக். முன்னாள்…

2003 ஆகஸ்ட் 15 அன்று இந்திய சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) மூலம் சந்திரயான் எனும் பெயரில் நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை…

அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்!!

ரயில் மின்சார ஊழியர்கள் அவசர வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாகியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

லூசி லெட்பி: செவிலியரான இவர் ஒரே ஆண்டில் 7 குழந்தைகளை கொன்றது ஏன்? சிக்கியது எப்படி?

இங்கிலாந்தின் செஷயர் நகரில் உள்ள 'கவுன்டெஸ் ஆஃப் செஸ்டர்' மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏழு குழந்தைகளைக் கொன்றது மற்றும் ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்றது ஆகியவற்றில் லெட்பி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்நாள்…

புனித ஜார்ஜ் கோட்டை: சென்னையின் 384 ஆண்டு கால வரலாற்றின் தொடக்கப் புள்ளி!! (கட்டுரை)

இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னை நகரத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்த புனித ஜார்ஜ் கோட்டை எப்படி உருவானது? இந்தியாவின் பண்டைய கால நகரங்கள் பல வீழ்ந்திருக்கின்றன. குக்கிராமங்கள்…

சாணக்கியனுக்கு பிக்கு பலமான எச்சரிக்கை!!

மட்டக்களப்பு, பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்று (22) சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு…

பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம்!!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இலங்கை…

பச்சையை வைத்து மனைவியென கண்ட கணவன்!!

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலையுச்சியில் படுகொலைச் செய்யப்பட்டு கைவிடப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை அப்பெண்ணின் சட்டரீதியான கணவன் அடையாளம் காட்டியுள்ளார். அதன்பின்னர், நீதவானின் பணிப்புரைக்கு அமைய அச்சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…

சந்திரயான்-3: விக்ரம் லேண்டரை பரிசோதிக்க ‘நாமக்கல் மண்’ தேர்வானது எப்படி?

இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ கடந்த ஜூலை 14ம் தேதி சந்திராயன் - 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்றுள்ள விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும்…

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வு – பிரதமர் மோடி பார்வையிட…

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70…

பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சுட்டுக்கொன்ற சௌதி அரேபிய எல்லைப் படை!!

ஏமன் நாட்டுடனான எல்லைப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை சௌதி அரேபிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்ததாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில், படுகொலை செய்யப்பட்டவர்களில்…

தெலுங்கானாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலி!!

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கபுதர் கானா பகுதியில் மாநில சிறப்பு காவல் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள 12-வது பட்டாலியனில் ஸ்ரீகாந்த் என்பவர் பாதுகாப்பு படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில்…

ஒலிம்பிக், உலகக்கோப்பை நேரத்தில் ‘மாதவிடாய்’ வந்தால் வீராங்கனைகள் என்ன…

“வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிறகு, நான் கீழே வந்து கொண்டிருந்தேன். எனக்கு அந்த நேரத்தில் மாதவிடாய் தொடங்கிய போது நான் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்தேன். எட்டாயிரம் மீட்டர் உயரத்தில் ஐந்து சிகரங்களை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்த…

ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு !!

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இத்தாலி குடியரசு மற்றும் ஜேர்மனி பெடரல்…

அமைச்சரை கடுமையாக சாடும் இராஜாங்க அமைச்சர் !!

துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தன்னை தன் கடமைகளை செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சின் விவகாரங்களை முன்னெடுக்க…