;
Athirady Tamil News
Yearly Archives

2023

இலங்கையின் ஆட்சியை பிடிப்பதே எனது நோக்கம்! மகிந்த திட்டவட்டம்

எதிர்வரும் அதிபர் தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது…

இலங்கை முழுவதும் மின்தடை: நாடு இருளில் மூழ்கியமைக்கான காரணம் அம்பலம் – மன்னிப்பு…

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார தடைக்கு தமது தவறே காரணம் என இலங்கை மின்சார சபை பொறுப்பேற்றுள்ளது. குறித்த தகவலை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் 5 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில் அதனை…

கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்

தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிா்கால அணுஉலைகள் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமானதாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா். மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் ரஷியாவுக்கு 5…

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கையடக்கத் தொலைபேசியை கொள்வனவுசெய்யும் போது, ​​குறித்த தொலைபேசி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட…

பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து பெண்

பாகிஸ்தான் நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் ஒருவர் முதல்முறையாக தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் 16 ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல்…

சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மக்கள் மூச்சு திணறல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வாயு கசிவு சென்னையில் எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ரசாயன கசிவு…

கதிர்காம ஆலய பிரதான பூசகர் கைது

கதிர்காமம் ஆலயத்திற்குச் சொந்தமான தங்கத் தட்டு (Tray) காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆலயத்தின் பிரதான பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தின் பிரதான பூசகரான சோமிபால ரி. ரத்நாயக்க, இன்று (27.12.2023) காலை கொழும்பு…

கொழும்பு தேசிய வைத்தியசாலை இளம் தாதி திடீர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் தாதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தாதி மருத்துவமனையில் இருந்து பண்டாரவளையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக…

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலும் இந்தப் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி மாவட்டத்தை…

ரஷ்யா போர்க்கப்பலை தகர்த்த உக்ரேனிய விமானப்படை

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய தாக்குதல் இன்றுவரை தொடரும் நிலையில் ரஷ்ய போர்க்கப்பலை உக்ரேனிய விமானப்படை அழித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…

சிறிலங்கா கிரிக்கெட் மீதான தடை நீக்கம்: சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பப்பட்ட…

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களின்…

வாகனங்கள் மீது அடுத்தடுத்து முறிந்து விழுந்த மரங்கள்: இருவர் வைத்தியசாலையில்

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் அடுத்தடுத்து வாகனங்கள் மீது முறிந்து விழுந்துள்ளன. குறித்த சம்பவம் இன்று (27.12.2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அரச மரமும், மேலுமொரு மரமும் இவ்வாறு முறிந்து…

மோடிக்கு உருக்கத்துடன் கடிதம்! விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்த வீராங்கனை

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரசு வழங்கிய விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளார். துஷ்பிரயோக குற்றச்சாட்டு இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது துஷ்பிரயோக நடவடிக்கை எடுக்காததால்,…

யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்கு…

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள்! மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு…

யாழ்.போதனாவில் டெங்கினால் இளைஞன் உயிரிழப்பு – நேற்றும் 71 பேர் சிகிச்சைக்காக அனுமதி

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான…

நல்லூர் – திருவாதிரை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை (27.12.2023) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து…

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை! வெளியானது சுற்றறிக்கை

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை எதிர்கொள்கிறோம் : ஹமாஸ் தலைவர் வெளிப்படை

முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை தற்போது எதிர்கொண்டு வருவதாக ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாயா சின்வர் என…

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கில்மிசா

சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கில்மிசா சென்று அங்கு வாழும் உறவுகளை சந்தித்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த கில்மிசா எனும் சிறுமி இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பாடல்…

உலகத்தலைவர்களை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி படைத்த சாதனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சனல் இன்று 2 கோடி சந்தாதாரர்களை கடந்தது. இதன்மூலம், உலகத் தலைவர்களின் சனல்களில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சனல் என்ற சாதனை படைத்துள்ளது. இந்த சனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் 4.5…

வைத்திய ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வதினை தவிர்க்கவும்:வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தற்போது பரவி வரும் இன்புளுவன்சா போன்ற வைரஸ் நோய்களுக்கு வைத்திய ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வதினை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக காய்ச்சல் காணப்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை…

நாடாளுமன்றத்தின் மின் கட்டணம் 7 கோடி ரூபாய் – சபாநாயகரின் மின் கட்டணம் 24 இலட்சம்…

நாடாளுமன்றத்திற்கு மே மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியின் மொத்த மின்சாரக் கட்டணம் 7 கோடியே 31 இலட்சம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்ற வளாகத்தின் மின் கட்டணம் ஒரு கோடியே 28 லட்சத்து 52 ஆயிரம்…

திரிபோஷாவில் இரசாயன விதிகளில் மாற்றம்: வெளியாகிய அதிர்ச்சி தகவல்

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தீர்மானத்தினால் எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிஸ கட்சி…

பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டில் திருடிய குற்றத்தில் பெண் உள்ளிட்ட 07 பேர் கைது

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட 7 பேர் பொலிஸாரால், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது…

யாழ்.பல்கலை மாணவி உயிரிழப்பு – அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை…

எம்மீது கை வைத்தால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் : ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேல், ஈரானிய பிரதேசத்தை ஆக்கிரமித்தால் டெல் அவிவை ஈரான் தரைமட்டமாக்கும் என்று ஈரானிய புரட்சிகர காவலர்களின் (IRGC) குட்ஸ் படையின் தளபதியின் உயர்மட்ட ஆலோசகர் இராஜ் மஸ்ஜிதி செவ்வாயன்று எச்சரித்தார். அவரது சரியான வார்த்தைகள், பாரசீக…

வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் தொடர்பில் வெளியானத் தகவல்!

வடக்கு நோக்கிய புகையிரத மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் (07.01.2023) ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம்…

ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்: டக்ளஸின் அதிரடி அறிவிப்பு

மீளவும் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக வர வேண்டும். நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தவர் ரணில் விக்ரமசிங்கவே ஆகையால் மீண்டும் அவரே ஜனாதிபதியாக வர வேண்டும். அவருக்கு ஆதரவை வழங்கி வெற்றி பெறச் செய்வதனூடாகத்…

விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் விஷேட நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான…

திடீரென பரவிய மூளைக்காய்ச்சல் தொடர்பில் வெளியாகிய தகவல்

மூளைக்காய்ச்சல் குறித்து தேவையில்லாத அச்சம் கொள்ள தேவையில்லை என்று சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் திடீரென…

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்: வெளியான சுற்றறிக்கை

கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இவ்வாறு…

பொதுக்குழு தகவல் – மதுரை மாநாடு செலவு டு தற்போது அதிமுகவின் பேங்க் Balance…

நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சார்பில் நடத்தப்பட்ட மதுரை மாநாட்டின் செலவு எவ்வளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நேற்று அதிமுகவின்…