;
Athirady Tamil News
Daily Archives

9 March 2025

‘வங்கி மண்’ வாங்கினால் பணம் சேருவதாக நம்பிக்கை – வாங்கி குவிக்கும்…

வங்கியின் வெளியே சேகரிக்கப்படும் மண்ணை வாங்கினால் செல்வம் சேரும் எனக்கூறி இணையத்தில் மண் விற்பனை அதிகரித்துள்ளது. வங்கி மண் சீனாவில் உள்ள வங்கிகளின் வாசலில் உள்ள மண்ணை வீட்டில் வைத்துக்கொண்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகி, செல்வம்…

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என…

வடகொரியா முதல் முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க தலைமையிலான ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க, அதிநவீன ஆயுதங்களின் நீண்ட விருப்பப் பட்டியலை வடகொரிய…

மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான பிரித்தானிய சிறப்பு தூதராக ஹார்மன் நியமனம்

மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான பிரித்தானிய சிறப்பு தூதராக ஹார்மன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தொழிலாளர் கட்சி எம்.பி. பாரோனெஸ் ஹாரியேட் ஹார்மன் (Baroness Harriet Harman), மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான புதிய பிரித்தானிய சிறப்பு தூதராக…

பொறுப்புக்கூறல் விடயத்தில் இதயசுத்தியான செயற்பாடு அவசியம்

இலங்கையில் புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய எந்தவொரு செயல்திறன் மிக்க நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையும் பாதிக்கப்பட்ட தரப்பினரது ஆதரவைப் பெற்றதாகவும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை…

ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன 3 பேரும் சடலமாக மீட்பு!

ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன மூன்று பேரும் நீர்வீழ்ச்சிக்கு அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் சிங் (40), யோகேஷ் சிங் (32), மற்றும் வருண் சிங் (15) ஆகியோர் மார்ச் 4 ஆம் தேதி பில்லாவரில்…

ஓடிசி தொடருந்திலிருந்து தவறி வீழ்ந்த சுற்றுலா பயணி

ஒஹிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று காலை எல்ல ஓடிசி தொடருந்திலிருந்து வீழ்ந்து சுற்றுலா பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சுற்றுலாப் பயணி கண்டியிலிருந்து எல்ல நோக்கிப் பயணித்த சீனாவைச்…

திடீரென இலங்கை வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

சுதா கொங்கரா இயக்கும் "பராசக்தி" திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து…

கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரி-ட்ரம்ப் மிரட்டல்

கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார் மேலும், கனடாவின் பால் மற்றும் இதர பண்ணை பொருட்கள் மீது சுமார் 250 சதவீத வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார். 2024-ல் கனடா பல அமெரிக்க…

திருமணம் செய்யுமாறு 1200 ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பிய நிறுவனம்

சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்று திருமணம் செய்துகொள்ளுமாறு 1200 ஊழியர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விவாகரத்து பெற்றவர்கள் உட்பட 28 – 58 வயதுடைய ஊழியர்கள் மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம்…

காசா புனரமைப்பு திட்டத்திற்கு பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா ஆதரவு

காசா புனரமைப்பிற்கு அரபு நாடுகளின் திட்டத்திற்கு பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா நான்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், அரபு நாடுகள்…

ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல்…

வாக்குவாதத்தால் மாமாவின் உயிரை பறித்த மருமகன்

வரகாபொல எத்னாவல பகுதியில் உறவினர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, 63 வயதுடைய நபரொருவர்…

மதுபோதையில் மயங்கிய இ.போ.ச ஊழியர்கள்: நிர்க்கதியாய் நின்ற மக்கள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொலன்னறுவை டிப்போவில் கடமையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சாரதி மற்றும் நடத்துனர் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்த மற்றும் கல்கந்த இடையே பயணித்த இலங்கை போக்குவரத்து சபை…

வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்களுக்கு இந்தியாவில் செயற்கை அவயங்கள்…

யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தால் முன்னெடுக்கப்படும் மாற்று வலுவுடையவர்களுக்கான செயற்கை அவயவங்களைப் பொருத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்களுக்கு இந்தியாவில் செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டது.…

பஞ்சாபில் தொழிற்சாலை கட்டடம் இடிந்ததில் ஒருவர் பலி, 5 பேர் மீட்பு

பஞ்சாபில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பஞ்சாப் பமாநிலம், ஃபோகல் பாயிண்ட் பகுதியில் ஜவுளித் தொழிற்சாலையின் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.…

ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!

கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், பாலியல்…

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை, கொல்லமுன்ன பகுதியில் வசிக்கும் அஷேன் பண்டார, வீட்டிற்கு அருகாமையில் உள்ளவருடன், வீதியை மறித்து கார் நிறுத்தப்பட்டது தொடர்பில் ஏற்பட்ட…

தேசபந்து தென்னகோனின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுமா? வெளிவந்த முக்கிய தகவல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பு…

மீண்டும் அதிகரித்த முட்டை – கோழி இறைச்சியின் விலைகள்

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்…

சர்ச்சைக்குரிய யூடியூபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ..

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை…

சிரியா: பாதுகாப்புப் படையுடனான வன்முறையில் உயிரிழப்பு 600-ஆக அதிகரிப்பு!

ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மேற்காசிய நாடான சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ…

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கன் நாட்டினர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஏஆர்ஒய் செய்திகளின்படி, ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற…

லக்னௌ: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், சனிக்கிழமையில் சீதாபூர் அருகே லக்னௌ -…

மியான்மரின் பொது தேர்தல் எப்போது? ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் அறிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் மக்களாட்சியைக் கலைத்து ராணுவ ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஜனநாயக முறைப்படி…

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இளம் பெண் கைது

திவுலப்பிட்டிய பகுதியில் பாரிய அளவிலான ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய…

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நேபாளத்தில் சனிக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்இஎம்ஆா்சி) கூறியதாவது:ேதிபத்தையொட்டி நேபாள பகுதியில் உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை…

யாழ்.போதனா மருத்துவமனையில் நோயாளர் நட்புறவாளர் சேவை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மன்றத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நோயாளர் நட்புறவாளர் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை நாடும் நோயாளிகளின் அடிப்படைத் தேவை களை இலகுபடுத்தி நோயாளரின் சுகாதார…

கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் எச்சரிக்கை

போபால்: கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில அரசு சார்பில் சுமார்…

கொலையில் முடிந்த அன்னதான விருந்து

வரகாபொல பொலிஸ் பிரிவின் அத்னாவல பகுதியில் நேற்று (08) இரவு ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் அத்னாவல, வரகாபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் தனது…

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கண்டனம்

யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber)…

யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைந்தமை – யூடியூப்பாருக்கு …

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் நடவடிக்கை கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை…

கடவுள் இருக்கிறார்.. ஹார்வர்டு பல்கலை. வானியற்பியல் நிபுணர் கண்டுபிடிப்பு

வில்லி சூன் என்ற மலேசியா நாட்டைச் சேர்ந்த, ஹார்வர்டு பல்கலை. வானியற்பியல் விஞ்ஞானி, கடவுள் இருக்கிறார் என்பதை சில கணித வழி முறைகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் மேற்கோள்காட்டி விளக்கியிருக்கிறார். இந்த கண்டுபிடிப்புகள் இன்னமும்…

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களே இயக்கிய வந்தே பாரத் ரயில்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் முழுக்க பெண்களே வந்தே பாரத் ரயிலை இயக்கினர். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இதற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச பெண்கள் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம்…