;
Athirady Tamil News

பலநாட்டுத் தோழர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்ற புளொட் சுவிஸ் கிளையின் வீரமக்கள் தினம் (படங்கள், வீடியோ)

0

பலநாட்டுத் தோழர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்ற புளொட் சுவிஸ் கிளையின் வீரமக்கள் தினம் (படங்கள், வீடியோ)

புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேசக் கிளைகளின் ஒருங்கிணைப்பில் புளொட் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முப்பத்திநான்காவது வீரமக்கள் தினம் நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

புளொட் சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளரான லெனின் எனும் தோழர்.செல்வபாலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வை முதலில் புளொட் சுவிஸ் கிளையின் உப நிர்வாகப் பொறுப்பாளரான தோழர்.ரமணன் ஆரம்பித்து வைக்க முதலில் நினைவுச் சுடரேற்றல் நிகழ்வு ஆரம்பமாகியது.

மேற்படி புளொட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரும் புளொட் சுவிஸ் கிளையின் மூத்த தோழருமான தோழர்.சுவிஸ்ரஞ்சன் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

நினைவுச் சுடரேற்றலை புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் தோழர்.பாலா அண்ணர், புளொட் அமைப்பின் தோழரும், புளொட் சுவிஸ் கிளை நிர்வாகசபை உறுப்பினரும் சமய, சமூக சேவகருமான குமார்அண்ணர் எனும் தோழர்.இரட்ணகுமார், புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், பிரித்தானியாக் கிளையின் உறுப்பினருமான தோழர்.ஸ்கந்தா, புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், பிரான்ஸ் கிளையின் மத்தியகுழு உறுப்பினருமான தோழர்.ரங்கா, புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளருமான தோழர்.சுகுமார், புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், சுவிஸ் கிளையின் பொறுப்பாளருமான சிவா எனும் தோழர்.சிவானந்தசோதி, புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஜேர்மன் கிளையின் உறுப்பினருமான யூட் அன்றில் சூட்டி எனும் தோழர்.ஸ்கந்தா, சமய, சமூகத் தொண்டரான திருமதி.புனிதாக்கா இரட்ணகுமார், “சுரபூஜிதா இசைப்பள்ளி” ஆசிரியை திருமதி.வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா, திருமதி.ராணி வர்ணகுமரன், ஆசிரியர்.திரு கணபதிப்பிள்ளை மாஸ்ரர், சுவிஸ் கிளைன் முன்னணித் தோழர்களான செல்வபாலன், ரமணன், குணா, தேவண்ணர், பாபு, அன்ரன், ராசன், குமார் (ரூபன்), பிரான்ஸ் கிளை முன்னணித் தோழர்களான தயாளன் (வவுனியா), தயா (மடடக்களப்பு), ஜெயந்தன், சசிகுமார், சசிகரன், கேதீஸ், சுதா, சுரேஷ், ஆகியோரினால் நினைவுச்சுடரேற்றல் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், சுவிஸ் கிளையின் பொறுப்பாளருமான சிவா எனும் தோழர்.சிவானந்தசோதி, புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் தோழர்.பாலா அண்ணர், புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், பிரான்ஸ் கிளையின் மத்தியகுழு உறுப்பினருமான தோழர்.ரங்கா ஆகியோரினால் ஈகைச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நினைவுக்சுடர் ஏற்றியவர்கள், ஈகைச்சுடர் ஏற்றியவர்கள் உட்பட கலந்து கொண்ட பொதுமக்களினால் மலரஞ்சலி நிகழ்த்தப்பட்ட்து. இதனைத் தொடர்ந்து மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மறைந்த கழக செயலதிபர், கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கத் தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள் உட்பட அனைவருக்குமான இருநிமிட தோழமை அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் புளொட் அமைப்பின் தோழரும், புளொட் சுவிஸ் கிளை நிர்வாகசபை உறுப்பினரும் சமய, சமூக சேவகருமான குமார்அண்ணர் எனும் தோழர்.இரட்ணகுமார் அவர்களினால் அனைவரையும் வரவேற்று தலைமையுரை ஆற்றப்பட்டது. தோழர்.இரட்ணகுமார் அவர்களினால் வீரமக்கள் தின நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, கழகத்தின் செயல்பாடுகளையும் மறைந்த அனைவரின் ஆத்மாக்களும் சாந்தியடையும் வகையில் ஓரணியில் இணைந்து அனைவரும் செயல்பட வேண்டுமென” கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வீடியோக் காணொளி வாயிலாக வீரமக்கள்தின நினைவுரையை வழங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் தலைவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாஜாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்,
புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான தோழர்.பா.கஜதீபன்,
புளொட் அமைப்பின் நோர்வேக் கிளையின் பொறுப்பாளரான ராஜன் எனும் தோழர் சிவராஜா ராஜசிங்கம் அவர்கள்,
புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் பொறுப்பாளரான பிரேம் அன்றில் நேதாஜி எனும் தோழர் க பிரேம்சங்கர்அவர்கள், புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் நிர்வாக செயலாளரான அலெக்ஸ் எனும் தோழர்.சபா சுகந்தன் அவர்கள் ஆற்றிய உரைகள் ஒளிபரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து “சுரபூஜிதா இசைப்பள்ளி” ஆசிரியை திருமதி.வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா அவர்களின் ஒழுங்கமைப்பில், செல்வன்.அஸ்ரித் ஜெயச்சந்திரனின் அபிநயப் பாடல், செல்வி.சுப்ரஜா புஷ்பானந்தசர்மா, செல்வி.ஆரணி தயாபரன் ஆகியோரின் கர்னாடக இசை, செல்வி.யுவர்சிகா ஜெயச்சந்திரனின் “இளமைப் பருவத்தில்” எனும் தலைப்பில் சிறப்புப் பேசசு போன்ற பல்வேறு கலைநிகழ்வுகள் நடைபெற்றது.

தொடர்ந்து பல சிரமங்களுக்கு மத்தியில் வருகை தந்த கழகத்தின் முன்னணித் தோழரும், புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் முன்னாள் பொறுப்பாளருமான தோழர்.பாலா அண்ணா அவர்களும்,
புளொட் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும், பிரான்ஸ் கிளையின் நிதிப் பொறுப்பாளருமான தோழர்.ஜெயந்தன் அவர்களும் பிரான்ஸ் கிளை சார்பிலும்
ரெலோ அமைப்பின் மூத்த போராளியும் சுவிஸில் வாழ்பவருமான தோழர்.வெற்றிமயில்நாதன் அவர்களும்,
புளொட் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும், பிரான்ஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளருமான தோழர்.தயாளன் (வவுனியா) அவர்களும் பிரான்ஸ் கிளை சார்பிலும்
வீரமக்கள்தின நினைவுரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து செல்வி.கேதாரணி இரட்ணகுமார் அவர்களின் சிறப்பு சிவநடனம் நடைபெற்று அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருமதி.வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா செல்வி.கேதாரணி இரட்ணகுமார் உட்பட கலைநிகழ்வுகள் தந்தோர் உட்பட பல்வேறு நாடுகளிலும் வந்து கலந்து கொண்ட தோழர்களும் கழக சுவிஸ் கிளையின் தோழர்கள் அனைவராலும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக புளொட் அமைப்பின் தோழரும், புளொட் சுவிஸ் கிளை நிர்வாகசபை உறுப்பினரும், சமய, சமூக சேவகருமான குமார்அண்ணர் எனும் தோழர்.இரட்ணகுமார் அவர்களினால் நன்றியுரையுடனும் புளொட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரும் புளொட் சுவிஸ் கிளையின் மூத்த தோழருமான தோழர்.சுவிஸ்ரஞ்சன் அவர்களின் நன்றி நவிலலுடனும் வீரமக்கள்தின நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

பலநாட்டுத் தோழர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்ற புளொட் சுவிஸ் கிளையின் வீரமக்கள் தினம் (வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் தலைவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாஜாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றிய உரை..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான தோழர்.பா.கஜதீபன் அவர்கள் ஆற்றிய உரை..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் நோர்வேக் கிளையின் பொறுப்பாளரான ராஜன் எனும் தோழர் சிவராஜா ராஜசிங்கம் அவர்கள் தற்போது தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்றுள்ள போதிலும் அங்கிருந்து ஆற்றிய உரை..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் நிர்வாக செயலாளரான அலெக்ஸ் எனும் தோழர்.சபா சுகந்தன் அவர்கள் ஆற்றிய உரை..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் பொறுப்பாளரான பிரேம் அன்றில் நேதாஜி எனும் தோழர் க பிரேம்சங்கர்அவர்கள் ஆற்றிய உரை..

You might also like

Leave A Reply

Your email address will not be published.