;
Athirady Tamil News

யாழில் நீதிமன்ற உத்தரவால் கடும்கோபம்; பொலிஸாரை செருப்பால் அடித்த பெண்!

0

யாழில் தன்னிடம் இருந்த எட்டு வயதுக் குழந்தையைத் தனது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரி மீது தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே பெண் , ஒரு பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

காவலர் மருத்துவமனையில் அனுமதி
பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண், பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்தல், காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 36 வயதுடைய ஐயங்கரன் பவிதா என்ற அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இந்த மாதம் 13ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.