யாழ். போதனா வைத்தியசாலையில் 11 வயதுச் சிறுவன் பலி: பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று ஏற்பட்டதே காரணம் என பிரதேச பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது.
இருபாலை வீதி – கோண்டாவில் கிழக்கை சேர்ந்த மகிந்தன் லர்மிகன் (வயது -11) என்ற சிறுவன் நேற்றுமுன்திகம் வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று இரவு, 7.30 மணியளவில் சிறுவன் உயிரிழந்தான்.
மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் வயிற்றோட்டத்தால் நீர்த் தன்மை குறைவடைந்து கிருமித் தொற்றினால் மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.