;
Athirady Tamil News

சாவகச்சேரியில் பரபரப்பு: காணியைத் துப்புரவு செய்தபோது சிக்கிய வெடிபொருட்கள்!

0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் சில வெடிபொருட்கள் இன்றையதினம் மீட்கப்பட்டது.

தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது காணிக்குள் துப்பரவு பணியில் ஈடுபட்டபோது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.

ஒரு மோட்டார் குண்டு, ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினர் மூலம் வெடிபொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.