புங்குடுதீவு மூன்றாம் வட்டார ஜீவசமாதிக்கு முன்னாள் உள்ள சிவன் கோயில் குன்றை, குளமாக்கி அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)
புங்குடுதீவு மூன்றாம் வட்டார ஜீவசமாதிக்கு முன்னாள் உள்ள சிவன் கோயில் குன்றை, குளமாக்கி அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)
புங்குடுதீவு மூன்றாம் வட்டார சின்னத்தம்பர் சித்தரின் ஜீவசமாதிக்கு முன்னாள் உள்ள சிவன் கோயில் குன்றானது பாழடைந்து இருந்த நிலையில், அதனைப் பொதுவாக பாவிக்க அக்கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ள நிலையில் கால்நடைகளின் நீர்த்தாகம், மற்றும் நன்மை கருதி அதனை திருத்தி அமைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்றும் இன்றுமாக ஊர்ப்பற்றாளன் திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினால் மேற்படி குன்றாக இருந்த இடம் பாறைகள் அகற்றப்பட்டு சுற்றி இருந்த பற்றைக்காடுகள் சிரமதானப்பணி மூலம் அழகுபடுத்தி குளமாக உருவாக்கி *ஜீவசமாதி சிவன் கோயில் குளமாக* புனரமைக்கப்பட்டு உள்ளது.
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை தாயின் பிறப்பிடமாகவும், கிழக்கூரை தந்தையின் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு கிழக்கூரில் வாழ்ந்து இப்போது லண்டனில் வதியும் *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* உறுப்பினர்களில் ஒருவரான ஊர்ப்பற்றாளன் திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினாலும், அவரது நிதிப் பங்களிப்பிலும் மேற்படி குளமானது குப்பைகூளங்கள், கற்கள் அகற்றப்பட்டதுடன், அழகுபடுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டது.
திரு.பரமலிங்கம் மயூரன் ஊர் சார்ந்து பல நல்ல சேவைகளை நீண்டகாலமாக செய்து வரும் ஊர்ப்பற்றாளன். அவருக்கும், இதுக்காக பாடுபட்ட அனைவருக்கும், உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
மக்கள் சேவையே மகேசன் சேவை..




















