;
Athirady Tamil News

சுவிஸ் செல்வபாலன் அவர்களின் 60வது பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் செல்வபாலன் அவர்களின் 60வது பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

சுவிஸில் வசிக்கும் திரு செல்வபாலன் அவர்களுடைய 60வது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ் சொலத்தூண் மாநிலத்தில் வசிக்கும் திரு செல்வபாலன் அவர்களின் இன்றைய 60வது பிறந்தநாளை முன்னிட்டு மனைவி மற்றும் பிள்ளைகள், ஈழதர்சன், யாழிசன் மருமகள் லெவீனா மற்றும் லெவீனாவின் பெற்றோர் தயாபரன், வாசினி, அத்துடன் நண்பர், சுபாஸ்கரன், இந்திரா ஆகியோரின் நிதி பங்களிப்பு மூலம் இவ்வுதவி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னி எல்லைக் கிராமமொன்றில் உள்ள அக்கிராம மாணவர்களுடன், அப்பிரதேச குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களும் அக்கிராம மக்கள் சிலரும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸில் வசிக்கும் செல்வபாலன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வறுமைகோட்டுக்கு உட்பட்ட வவுனியா கணேசபுரம் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சுவிஸில் வசிக்கும் செல்வபாலன் அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.,

வவுனியா கணேசபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கோனேஷ் மதுரவீரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் வவுனியா கணேசபுரம் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர் திருமதி செல்வராஜா கிருபாலினி தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய நாளில் சுவிஸில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திரு செல்வபாலன் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தும் அதேவேளை, தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் கிராம மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
11.05 2026

சுவிஸ் செல்வபாலன் அவர்களின் 60வது பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (வீடியோ)

 

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. 

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.