;
Athirady Tamil News

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்காவில் 8 நகரங்களில் சாமி திருக்கல்யாணம் ..!!

0

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை 8 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 18-ந் தேதி சான்பிரான்சிஸ்கோ, 19-ந்தேதி சியாட்டில், 25-ந்தேதி டல்லாஸ், 26-ந்தேதி செயின்ட் லூயிஸ், 30-ந்தேதி சிகாகோ, ஜூலை 2-ந்தேதி நியூ ஆர்லியன்ஸ், 3-ந்தேதி வாஷிங்டன், 9-ந்தேதி அட்லாண்டா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. சாமி திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாண உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களுக்கான கல்யாண உற்சவம் டிக்கெட்டுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.