நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட எம்.பி !!
நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் மஹிந்தானந்த அளுத்கமகேயும் ஒருவராவார் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (30 ) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விவசாய அமைச்சராக இருந்து விவசாயத்தையே அழித்து உணவுப் பஞ்சத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியதன் மூலம் மக்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளாகியுள்ளார்.
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் சரியாக வழிநடாத்த முடியாமல், நாட்டையும் நாட்டு மக்களையும் பாதாளத்துக்குத் தள்ளிய இவரைப் போன்றவர்கள், எரிபொருளுக்காக ரஷ்யாவுடனும் அமீரகத்துடனும் ஜனாதிபதி பேசுகின்றார் என்று ஊடகங்களின் முன்வந்து சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி மேலும் தெரிவித்துள்ளார்.