;
Athirady Tamil News

ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது கார் குண்டு தாக்குதல்- 6 பேர் பலி..!!

0

ஏமன் நாட்டின் தெற்கு பகுதி நகரமான ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் 4 பொதுமக்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. ஏடன் நகரில் அடிக்கடி அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.