;
Athirady Tamil News

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான அலுவலகம் திறந்துவைப்பு!! (PHOTOS)

0

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவால் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், யாழ்ப்பாண தொகுதி பிரதம அமைப்பாளர் ஜெயேந்திரன், தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.