;
Athirady Tamil News

பல்கலை மாணவியின் நிர்வாண காணொளிகளை வெளியிட்ட காதலன் கைது!

0

காதலியுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக பல்கலைக்கழக மாணவரொருவர் காதலியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள குறற்ச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மாணவன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், காதலி நிக்கரவெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில், காதலன் தனக்கு பொருத்தமானவர் அல்ல என காதலி பேசுவதற்கு மறுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவன் தன்னுடன் மீண்டும் காதல் உறவில் ஈடுபடுமாறு பல்கலைக்கழக மாணவியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மாணவி அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவியை காதலன் பழிவாங்கும் நோக்கில் நிர்வாண காட்சிகளை காணொளியாக வாட்ஸ்அப் மூலம் சகோதரர் சகோதரிகளின் கைபேசிக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இளைஞனை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.