;
Athirady Tamil News

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கு 650 மில்லியன் ஒதுக்கீடு: புதிய திட்டங்களுக்காகவும் நிதி! வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன்…!

0

எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கு 650 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதுடன், புதிய திட்டங்களுக்காகவும் நிதி ஒதுக்கியுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பாக இன்று (21.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். அந்தவகையில் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்களின் வாழ்க்கைஜதரத்தை உயர்த்துதல், வீதிப் புனரமைப்பு, திண்மக்கழிவு முகாமைத்துவம், கல்வி, சுகாதாரம், பெண்களின் நலன் மற்றும் வறிய குடும்பங்களுக்கான மேம்பாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இவ் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் தேவைகளை அறிந்து எதிர்பார்ப்புக்களையும் கருத்துக்களையும் பெற்று இவ்வரவு செலவுத் திட்டத்தை மேற்கொள்வது எமது நோக்கமாக உள்ளது.

குறிப்பாக 2027 இல் பல்வேறு புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக 650 மில்லியன் ரூபாயும், திண்மக் கழிவுகள் அகற்றுவதற்காக 25 மில்லியன் ரூபாயும், விளையாட்டு மைதானங்களின் விருத்திக்காக 6.5 மில்லியன் ரூபாயும், தார் வீதிகளுக்காக 28 மில்லியனும், கிரவல் வீதிகளுக்காக 16 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை நெளுக்குளத்தில் அமைந்துள்ள சபையின் தலைமை அலுவலகம், மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம்,சபையின்முகநூல் தளம்,மற்றும் நூலகங்களிலும் பொதுமக்கள் பார்வையிட முடியும்.

எனவே எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதிக்கு முன்னர் வரவு செலவுத்திட்டம் தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.