;
Athirady Tamil News

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: பெண் எம்.பி. மீது 2 முறை கார் ஏற்றி கொலை முயற்சி- மர்ம நபர் கைது

0

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் காரில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மீது மர்ம மனிதன் ஒருவன் வேண்டுமென்றே காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திட்டமிட்ட தாக்குதல்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திற்குட்பட்ட வாங்காராட்டா நகரில் ஹெலன் ஹெய்ன்ஸ் (வயது 65) என்ற சுயேச்சை பெண் எம்.பி. வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது தொகுதி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பகுதியில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார்.

கொலை முயற்சி
அப்போது அந்த வழியாக காரில் வந்த 43 வயது மர்ம நபர், திடீரென காரை மின்னல் வேகத்தில் கொண்டு வந்து ஹெலன் ஹெய்ன்ஸ் மீது பயங்கரமாக மோதினான். அத்துடன் நிற்காமல், அந்த காரை மீண்டும் பின்னோக்கி எடுத்து, இரண்டாவது முறையாக அவர் மீது ஏற்றி கொல்ல முயன்றான்.

மர்ம நபர் கைது
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடிவந்து, அந்த காரை முற்றுகையிட்டனர். காரில் இருந்த நபரை மடக்கி பிடித்து, அவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஒரு கால் துண்டிப்பு
இந்த பயங்கர விபத்தில் இரண்டு கார்களும் இடையே நசுங்கி படுகாயமடைந்த எம்.பி. ஹெலன் ஹெய்ன்ஸ், உடனடியாக மெல்போர்ன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவரது ஒரு கால் மிக மோசமாக சிதைந்ததால், அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அவரது ஒரு காலை துண்டித்தனர். மற்றொரு காலை காப்பாற்ற டாக்டர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பயங்கரவாத பிரிவு விசாரணை
கைது செய்யப்பட்ட நபர் பிரெண்டன் நுஜென்ட் (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறும்போது, “இது விபத்து அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் பயங்கரவாதச் சதி உள்ளதா என்ற கோணத்தில் ஆஸ்திரேலியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.