;
Athirady Tamil News

நட்சத்திர நீலக் கல் கொத்தணியின் உண்மையான பெறுமதி எவ்வளவு தெரியுமா?

0

2021 ஆம் ஆண்டில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் கொத்தணியின் உண்மையான பெறுமதி 10,200 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே என்று தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவினூடாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இதன் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறப்பட்டது.

2021 ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கிணறு தோண்டிய தொழிலாளர்களால் இந்த நட்சத்திர நீலக் கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஏறக்குறைய 510 கிலோ கிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.