;
Athirady Tamil News

கனேடிய அரசு வெளியிட்ட அறிவிப்பு -தகவல் அளித்தால் கிடைக்கும் கோடி சன்மானம் !!

0

கனேடிய அரசாங்கம் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ஒருவரின் பெயரை சேர்த்துள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில், மூளையாக செயல்பட்ட தாதா கோல்டி பிரார் என்ற சதீந்தர் சிங் பிராரை, ‘தேடப்படும் முக்கிய – 25 குற்றவாளிகள்’ பட்டியலில், கனேடிய அரசு சேர்த்துள்ளது.

சிறையில் உள்ள தனது நண்பருடன் சேர்ந்து சித்து மூசேவாலாவை, கூலிப்படை உதவியுடன், கோல்டி பிரார் கொலை செய்தமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கோல்டி பிராருக்கு எதிராக, ‘ரெட் கோனர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , INTERPOL-FAST என்ற தப்பியோடியவர்களை கண்டுபிடிக்கும் அணியினர், கோல்டி ப்ராரை பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு இந்தியாவிலுள்ள கனேடிய தூதரகத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர் பற்றிய சரியான தகவல் தருபவர்களுக்கு 1.5 கோடி சன்மானம் என கனேடிய அரசு அறிவித்துள்ளது.

கோல்ட் ப்ரார் கனடா காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி என்பதால், இந்திய காவல்துறை இவர் தொடர்பில் தீவிர விசாரணையை தொடர வேண்டுமெனவும் இந்தியாவிலுள்ள கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.