இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!

ஈரான் அருகே மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய விடியோ வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான 12 நாள் போரில் வடக்கு தெஹ்ரான் அருகே மக்கள் நடமாட்டப் பகுதியில் ஒரு சாலையில், இஸ்ரேல் குண்டு வீசி, தாக்குதல் நடத்திய விடியோ வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் கட்டடங்கள் தரைமட்டமாவதுடன், சாலையில் உள்ள கார்களும் அந்தரத்தில் பறப்பதுபோன்று விடியோ வெளியாகியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 12 நாள்களாக நடைபெற்ற இந்தப் போர், ஜூன் 24 ஆம் தேதியில் முடிவு பெற்றது.