புதிய கார் வாங்கிய சந்தோஷத்தை ஷோரூமில் நடனமாடி கொண்டாடிய குடும்பத்தினர்!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/05/1886072-car-750x430.jpg)
புதிய கார் வாங்க வேண்டும் என்பது சிலருக்கு கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறிய மகிழ்ச்சியை ஆனந்தமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ள டுவிட்டில், ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், ஒரு குடும்பத்தினர் புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியை ஷோரூமிலேயே நடனமாடி கொண்டாடிய காட்சிகள் இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி தினாநாத்சாகு என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் டெலிவரி பெற சென்றுள்ளார். அவரது 23-வது திருமண நாளன்று கார் டெலிவரி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சாகு தனது மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து அந்த கார் முன்பு நடனமாடி மகிழ்கிறார்கள். இந்த வீடியோவை ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்க தலைவர் டுவிட் செய்ய அதனை ஆனந்த் மஹிந்திரா ரீ-டுவிட் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.