;
Athirady Tamil News

சுதந்திர தின விழா: ‘ஆப்சென்ட்’ ஆன கார்கே.. என்ன காரணம் தெரியுமா? அவரே சொன்ன ரகசியம்!!

0

இந்தியா முழுவதும் 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் உள்ள ராஜ் காட் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதற்கு பிறகு புது டெல்லியில் உள்ள புகழ் பெற்ற செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி ஒரு நீண்ட உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளிகளுக்கு வழக்கம் போல் முன் வரிசையில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால், கார்கே நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது. பிரதமர் உரையாற்றி கொண்டிருக்கும் போது கார்கேயின் இருக்கை காலியாக இருந்த காட்சியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.

இது குறித்து கார்கே ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “எனக்கு கண் பார்வை பிரச்சனை இருக்கிறது. அதனால் சுதந்திர தின விழாவிற்கு வருவதை தவிர்த்து விட்டேன். மேலும் எனது வீட்டிலும், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் நான் தேசிய கொடி ஏற்றி வைக்க வேண்டி இருந்தது. நான் செங்கோட்டைக்கு வந்திருந்தால், அங்கு பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் படி உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சபாநாயகர் அகியோர் வெளியே சென்ற பிறகுதான் நான் வெளியே வந்திருக்க முடியும்.

அதற்கு பிறகு நான் காங்கிரஸ் கட்சி அலுவகத்திற்கு வந்து கொடி ஏற்றி வைத்திருக்க முடியாது. இந்த காரணங்களால் நான் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.” இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று, முதல் முறையாக அக்கட்சி அலுவலகத்தில் கார்கே இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.