;
Athirady Tamil News

அமெரிக்க நகர கவுன்சில் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண் வேட்பாளர் மீது இனவெறி பிரசாரம்!!

0

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கேரி டவுன் கவுன்சிலுக்கு (நகரசபை) தேர்தல் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான சரிகா பன்சால் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சரிகா பன்சால் மீது இனவெறி வெறுப்பு பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது. சரிகா பன்சாலின் பிரசார பதாகையில் அவரது முகத்தில் ஒரு கறுப்பின நபரின் முகத்தின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அவர் போட்டியிடும் வெஸ்ட் கேரி தொகுதியில் உள்ள ஹைகி ராப்ட் கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு சரிகா பன்சாலின் பிரசார அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. இந்த இனவெறி பிரசாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சரிகா பன்சால் கூறும்போது, இனவெறி பிரசார சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. எனது பிரசாரத்துக்கு எதிராக இனவெறிச் செயலால் உண்மையிலேயே வருத்தம் அடைந்தேன்.

நமது நகரத்தில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான வழிமுறையாக நாம் பன்முகத்தன்மையை ஏற்று கொள்ள வேண்டும். கேரி நகரில் பழுப்பு அல்லது கறுப்பு நிற மக்களுக்கு எதிரான மத வெறி அல்லது இன வெறிக்கு இடமில்லை என்றார். மேயர் ஹரோல்ட் கூறும் போது, இந்த இனவெறி வெறுக்கத்தக்க செயல். கேரி நகரில் நாம் விரும்பும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானது. இது எங்கள் சமூகத்தை நெருக்கமாக கொண்டுவர மட்டுமே உத வும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.