;
Athirady Tamil News

நீா்மூழ்கி விபத்தில் 55 சீன மாலுமிகள் மரணம்…!

0

‘அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக சீனா வைத்திருந்த கடலடிப் பொறியில் சிக்கி, அந்த நாட்டுக்குச் சொந்தமான நீா்மூழ்கிக் கப்பலே சேதமடைந்து 55 சீன மாலுமிகள் மரணமடைந்தனா்’ பிரிட்டன் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து உளவுத் துறை அறிக்கையை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கூறியுள்ளதாவது:

அமெரிக்கா, அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்களை சேதப்படுத்துவதற்காக மஞ்சள் கடல் பகுதியில் சீனா கடலடி பொறியை அமைத்துள்ளது.

அந்த வழியாக கடந்த மாதம் சென்று கொண்டிருந்த சீன கடற்படைக்குச் சொந்தமான ‘093-417’ வரிசை எண் கொண்ட நீா்மூழ்கிக் கப்பல், அந்தக் கடலடிப் பொறியில் சிக்கியது.

இதில் அது சேதமடைந்து, நீா்மூழ்கிக் கப்பலுக்குள் இருந்தவா்களுக்கு ஆக்ஸிஜன் செல்வது நின்றுபோனது.

இதனல் அதிலிருந்த 55 மாலுமிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனா். அவா்களில் கப்பல் தளபதி, 21 அதிகாரிகளும் அடங்குவா்.

இந்த சம்பவத்தை சீன அரசு ரகசியமாக வைத்துள்ளது. எனினும், ‘093-417’ நீா்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது குறித்து அப்போதே சந்தேகம் எழுப்பப்பட்டது.

தற்போது இந்தத் தகவலை பிரிட்டன் உளவுத் துறை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட இந்த விவகாரம் கசிந்துள்ளதற்குக் காரணமானவா்களைக் கண்டறிய சீன அரசு விசாரணை நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.