;
Athirady Tamil News

128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

0

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சலஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

1900ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது முதன் முதலாக கிரிக்கெட் விளையாடப்பட்டது.

128 ஆண்டுகளின் பின்னர் தற்போது மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இறுதி முடிவு
கிரிக்கெட்டுடன் சேர்த்து பேஸ்பால்/சாஃப்ட்பால் (Softball), ஃபிளாக் ஃபுட்பால் (Flag Football), லெக்ராஸ் (Lacrosse) , ஸ்குவாஷ் (Squash) ஆகிய விளையாட்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான கலந்துரையாடல்களின் போது ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் அதனை இருபதுக்கு இருபது ஆட்டமாக நடத்த முடியும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

மேலும், ஐ.சி.சி தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு நேரடியாக தகுதி பெறும் எனவும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகள் இரு நாட்களுக்கு நான்கு இன்னிங்ஸாக விளையாடப்பட்டது.

இந்த போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி பிரிட்டன் தங்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.