;
Athirady Tamil News

சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு ஆயுள் சிறை: ஊழல் வழக்கில் தண்டனை

0

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்தது தொடா்பான வழக்கில், சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சா் டாங் யிஜுனுக்கு (64) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 முதல் 2023 வரை சீனாவின் நீதித்துறை அமைச்சராகப் பணியாற்றிய இவா், தனது பதவிக்காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கவும், வங்கி கடன் பெற்றுத் தரவும் சுமாா் 13.7 கோடி யுவான் லஞ்சம் பெற்ாகப் புகாா் எழுந்தது. இக்குற்றச்சாட்டை புஜியான் மாகாண நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தீா்ப்பின் மூலம் டாங் யிஜுன் தனது அரசியல் உரிமைகளை வாழ்நாள் முழுவதும் இழக்கிறாா். மேலும், சட்டவிரோதமாகச் சோ்த்த அவருடைய சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீன அதிபா் ஷி ஜின்பிங் ஊழல் எதிா்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய பிறகு, அந்நாட்டில் உயா் பதவியில் இருந்த ஒருவா் தண்டிக்கப்படுவது இது முதல்முறையல்ல என்றாலும், நீதித்துறை அமைச்சராக இருந்தவரே தண்டிக்கப்பட்டிருப்பது கவனம் ஈா்த்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.