;
Athirady Tamil News

ISRO: ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன ஆனது..? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!

0

ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆதித்யா எல்-1
சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ (ISRO). இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ராஞ்சியன்’ புள்ளி 1ஐ சென்றடையும்.

பின்னர் அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். மேலும், வரும் ஜனவரி 7ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் ‘லெக்ராஞ்சியன்’ புள்ளியை சுற்றி நிலை நிறுத்தப்படும் என சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விண்கலம் குறித்த தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ தகவல்
அதில் “ஆதித்யா எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.

ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியால் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது” என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.