;
Athirady Tamil News

திடீரென மீண்டும் குறைந்த சிலிண்டர் விலை; மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் – எவ்வளவு தெரியுமா?

0

வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டு ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிலிண்டர் விலை
சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.

மேலும், கேஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும். அந்தவகையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

குறைவு
இந்நிலையில், இன்று வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டு ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 22ம் தேதி வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரூ.4.50 குறைக்கப்பட்டு ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 918.50ல் நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.