;
Athirady Tamil News

நடுவானில் பரபரப்பு! ஐரோப்பாவில் 16 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

0

ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்ற பயணிகள் விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தரையிறக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

பல்வேறு நாடுகளில் இருந்து புறப்பட்ட ஏராளமான பயணிகள் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவசர அவசரமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது இரண்டாவது முறை என்று கூறப்படுகிறது.

பல்கேரியாவில், மூன்று விமானங்கள் அவசரமாக தரையிறங்கியிருக்கிறது. பெல்ஜியம் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, விமானத்தில் எந்த வெடிபொருளும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஏழு விமானங்கள் தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்றதொரு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளும் எந்தவொரு வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. அனைத்தும் போலியான மிரட்டல்கள் என்று தெரிய வந்தது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இந்த மிரட்டல் விடுக்கப்படுவது குறித்து உரிய விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.