;
Athirady Tamil News

ரணில் அரசாங்கத்தின் செயலால் வறியவர்களாக மாறியுள்ள 27 இலட்சம் பேர்

0

இலங்கையின் சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் 27 லட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது மனித அவலத்தில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புடவை, சில் ஆடைகள் பகிர்ந்து, கடனை மறுசீரமைத்து, அரசு செலவினங்களை கட்டுப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முடியாது.

அரசின் வருவாயை அதிகரிப்பது போன்றவற்றை சர்வதேச நாணய நிதியம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வரிசைகள், பொருட்கள் தட்டுப்பாடு, உரத் தட்டுப்பாடு, வாகனங்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாலும், நாடு நிதி ரீதியாக ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கியின் பிரதான ஆளுநர் மற்றும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த பண்டிகைக் காலங்களில் அதிகளவான மக்கள் நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் சென்று பணத்தைச் செலவு செய்ததாலும், நாட்டின் பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதாலும் நாடு வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் நினைப்பதாக சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்.

அதிக மின்சாரக் கட்டணம், அதிக எரிபொருள் கட்டணம், தொலைபேசிக் கட்டணங்கள் என்பன நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி அதன் மூலம் பொருளாதாரச் சுருக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக மாறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.