;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

0

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.