;
Athirady Tamil News

யாழ். பல்கலை மாணவர்களின் நிதி திரட்டும் நிகழ்வு

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக பிரதான வாயில் வளாகத்தில் நிதி சேகரிப்பதற்காக வாகன சுத்திகரிப்பு நிகழ்வும்(CAR WASH) உணவு திருவிழாவும்(FOOD FESTIVAL) நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வானது MACOS 2024 நிகழ்வின் ஒரு பகுதியாகும்.

வருடம் தோறும் MACOS நிகழ்வானது மாணவர்களின் கலைத்திறமைகளையும் விளையாட்டுத்திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் முகமாக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடமும் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கும் விதமாக ஆரம்ப நிகழ்வாக இந்த வாகன சுத்திகரிப்பு நிகழ்வும், உணவுத்திருவிழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்.சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா, முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அந்த வகையில் இவ்வருடமும் நிதி சேகரிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிதியானது இயலாதவர்களுக்கு நன்கொடையளிப்பதற்கும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுதாய சமையலறைக்கு (Community Kitchen) நன்கொடையளிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

இது மாணவர்களிடையே ஒற்றுமையையும் சமூகப்பொறுப்பையும் கட்டியெழுப்புவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக இருந்தது.

மேலும் இந்நிகழ்வில் சமூக நலன் கருதி நிதிப்பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாணவர்களால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.