;
Athirady Tamil News

ஒற்றை தலைவலியை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்! உடனடி மருத்துவம்

0

பொதுவாக ஒற்றை தலைவலி பிரச்சினை வந்து விட்டால் ஒரு வேலையை கூட சரியாக பண்ண முடியாத நிலை வந்து விடும்.

இதனை சரிச் செய்ய ஆங்கில மருத்துவத்தை விட கை வைத்தியம் சிறந்தது. ஒற்றை தலைவலி சில நோய்நிலைமையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

இதன்படி, ஒற்றை தலைவலி வந்தால் கொத்தமல்லி வைத்தியம் செய்வது நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கும்.

இது போன்று, கொத்தமல்லி வேறு என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

கொத்தமல்லி
1. தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் கொத்தமல்லி, சந்தன சிராய்டுகள் மற்றும் நெல்லி வற்றல் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தண்ணீருடன் போட்டு பருகலாம்.

2. ஒற்றை தலைவலி பிரச்சினையுள்ளவர்கள் சந்தனம் மற்றும் கொத்தமல்லி, ஆகிய இரண்டையும் எடுத்து அரைத்து பற்றுப்போட்டால் தலைவலி குறையும்.

3. சிலருக்கு மாதவிடாயின் போது அதிகமான ரத்த போக்கு ஏற்படும். இது போன்ற நேரங்களில் மல்லி விதை- 50 கிராம், கசகசா விதை- 25 கிராம், கொத்தமல்லி குடிநீர் இவை மூன்றையும் கலந்து மோருடன் குடிக்க வேண்டும். அத்துடன் செரிமான பாதையும் சீராக இருக்கும்.

4. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொத்தமல்லி விதைகளை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஏனெனின் இது பித்தத்தை தணிக்கும் ஆற்றல் கொண்டது.

5. மது, காபி, டீ இவற்றில் பிரியராக யாராவது இருப்பின் அவர்களுக்கு மல்லித்தூள் – 100 கிராம், மருதம்பட்டை பொடி – 50 கிராம், செம்பருத்தி பொடி -50 கிராம் இவை அனைத்தையும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமான சூடு தண்ணீரில் கலந்து குடித்தால் குடிவெறி நீங்கும். இந்த முறையை தான் எமது முன்னோர்கள் காலங்காலமாக செய்து வருகின்றனர்.

6. டீ, காபி அதிகமாக குடிப்பதால் உடலில் வேறு வேறு பிரச்சினைகள் அதிகமாக வர வாய்ப்பு இருக்கின்றது. இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் காலையில் சீரகம், உலர்ந்த துளசி இலை, கொத்தமல்லி விதைகள், தேன் – ஒரு தேக்கரண்டி இவை அனைத்தையும் கலந்து நீர் விட்டு குடிக்கலாம். இது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.