;
Athirady Tamil News

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் : இன்று 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

0

கொழும்பில் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று(2024.02.10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தல நீர் விநியோக திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.