;
Athirady Tamil News

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்… கொல்லப்பட்ட சிறுவர்களின் அதிர்ச்சி எண்ணிக்கை!

0

காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் துருப்புக்கள் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலால் அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவைச் சிகிச்சை பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு குண்டுவீச்சு தாக்குதல்களும் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பல சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.