;
Athirady Tamil News

தைவானை குறி வைக்கும் சீனா: சுற்றி வளைக்கப்பட்ட போர் விமானங்கள், கப்பல்கள்

0

தைவானை சுற்றி சீனாவின் 14 போர் விமானங்கள் மற்றும் ஆறு கடற்படை கப்பல்கள் பறந்துள்ளதாக தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு விமானங்கள் தைவானின் ஜலசந்தி மத்திய கோட்டு பகுதியில் பறந்ததாகவும் நான்கு விமானங்கள் அந்நாட்டின் வான் பாதுகாப்பு கண்டறியும் மண்டல பகுதிக்குட்பட்ட தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு மூலை பகுதிகளிலும் பறந்துள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (10) காலை ஆறு மணி முதல் நேற்று (11) காலை ஆறு மணி முதல் இடம்பெற்றுள்ளது.

சுயாட்சி தன்மை
சீனாவை ஒட்டியுள்ள தைவான் சுயாட்சி தன்மையுடன் தனி நாடாக செயல்பட்டு வருகின்ற நிலையில் தன்னுடைய ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாக தைவானை சீனா பார்க்கிறது.

இந்நிலையில் தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுகரம் நீட்டி வருவதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா அவ்வப்போது தைவானை சுற்றி இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இராணுவ விமானங்கள்
அவ்வப்போது சீனாவை சேர்ந்த இராணுவ விமானங்கள், கடற்படை கப்பல்கள் தைவானின் வான்பரப்பை சுற்றி வந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இதனை கண்டறிந்து தைவானும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கையால் அவர்களுடைய இராணுவ நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில் விமானம், கடற்படை கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களை தைவான் குவித்தன.

ஏப்ரலில் இதுவரை சீனாவின் இராணுவ விமானங்களை 71 முறையும் மற்றும் கடற்படை கப்பல்களை 63 முறையும் தைவான் கண்டறிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடற்படை கப்பல்கள்
கடந்த மார்ச் மாதத்தில் தைவானை சுற்றி சீனாவின் 359 இராணுவ விமானங்கள் மற்றும் 204 கடற்படை கப்பல்கள் கண்டறியப்பட்டதாகவும் குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தைவானின் வான் மற்றும் கடல் பகுதிகளை சுற்றி இயக்கி வரும் கடற்படை கப்பல்கள் மற்றும் ராணுவ விமானங்களின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இது தைவானுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தாலும் இதற்கு தைவான் பதிலடியும் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.