;
Athirady Tamil News

அரசு பேருந்துகளை குறிவைத்து துரத்தும் போலீஸ்; ஏன்? AITUC பரபரப்பு கடிதம்!

0

நாங்குநேரி போலீசார் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அரசு பேருந்துகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஆறுமுகப்பாண்டி எனும் காவலர் ஏறியுள்ளார். வழக்கம் போல் நடத்துனர் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அதற்கு, “தானும் ஒரு அரசு ஊழியர் தான். டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை வெஒளியிட்ட அறிக்கையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது போக்குவரத்து காவலர்கள் அரசு போக்குவரத்து கழக பஸ்களை வழிமறித்து நடத்துனர்கள், ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

AITUC கடிதம்
நோ பார்க்கிங்கில் பஸ்சை நிறுத்தியது, சீருடை சரியாக அணியாதது உள்ளிட்ட பல காரணங்களை கூறி காவல்துறை அரசு பஸ் போக்குவரத்துகள் கழக பணியாளர்கள் மற்றும் காவல்துறை இடையேயான மோதலாக உருவாகியுள்ளது.

இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (AITUC) சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு திட்டமிட்டு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் காவல்துறையினர் ஒன்றிணைந்து போக்குவரத்து கழகத்துக்கு எதிராக செயல்படுகின்றனர். போக்குவரத்து தொழிலாளர் – காவல்துறை இடையிலான பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் விதிமீறலை தடுப்பதாக கூறி இத்தகைய நடவடிக்கையை தொடங்கியிருப்பத என்பது நல்ல அறிகுறியில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.