;
Athirady Tamil News

யாழில் நிறுவனமொன்றில் களவாடப்பட்ட நகைகள்… இரண்டு யுவதிகள் அதிரடி கைது!

0

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மேலும் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூபா 2 250 000/= பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதென கூறிவரும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் உண்மையான குற்றவாளியை பொலிஸார் கண்டறிந்து தமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்து வந்த நிலையில் இன்று இரு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.