;
Athirady Tamil News

இன்று மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை

0

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) இறுதிக் கிரியை இன்று (02.02.2025) தினம் நடைபெறும் என நாடாளுமனற உறுப்பினர் சிறிதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்

அதன்படி இன்று காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய கிரியைகள் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சகலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.