;
Athirady Tamil News

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

0

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு, களனி பல்கலைக்கழகத்தில் வெகுசன தொடர்பாடல் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.