;
Athirady Tamil News

51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்

0

கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தண்டனைக் காலத்தின் குறிப்பிட்ட பகுதியை சிறையில் கழித்தவா்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக 51 கைதிகள் விடுவிக்கப்படுவா். நல்லெண்ண அடிப்படையிலும் வாடிகன் உடன் நெருங்கிய நட்பைப் பேணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 9,905 சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 10,000 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விடுவிக்கப்படும் கைதிகள் குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை.

வாடிகன் உடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, 500-க்கும் அதிகமான சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா அரசு முடிவெடுத்தது. இதன் ஒரு பகுதியாக கியூபா எதிா்க்கட்சித் தலைவா் ஜோஸ் டேனியல் ஃபெர்ரா் கடந்த ஆண்டு ஜனவரியில் விடுவிக்கப்பட்டாா். அக்டோபரில் நாட்டைவிட்டு வெளியேறிய ஜோஸ் டேனியல், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.

கியூபா சிறைகளில் 1,214 அரசியல் கைதிகள் இருப்பதாக பிரிசனா்ஸ் டிஃபென்டா் என்ற தன்னாா்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.