யாழ். நாக விகாரையில் வெசாக் தின நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51ஆவது காலாட் படை தலைமையகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வெசாக் தின நிகழ்வுகள் யாழில் எதிர்வரும் 12. 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
யாழ். ஸ்ரீ நாக விகாரையில் குறித்த நிகழ்வுகள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது அலங்கார வெளிச்சக்கூடு கண்காட்சி, அன்னதான நிகழ்வுகள் மற்றும் பக்திப் பாடல்கள் இசைத்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.