;
Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றில் நள்ளிரவில் நடந்த துயரம் ; விபத்தில் பறிக்கப்பட்ட இளைஞனின் உயிர்

0

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு குறித்த விபத்துச் இடம்பெற்றுள்ளது.

கல்விச் சுற்றுலா சென்ற வேன்
உயிரிழந்த இளைஞன் காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றை சேர்ந்த பாடசாலை ஒன்றினது மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்றும் மோட்டார்சைக்கிளும் மட்டக்களப்பு, ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியில் பயணிக்கும் போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பயணம் செய்துள்ளதுடன் அவர்களில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.