;
Athirady Tamil News

வவுனியாவில் வீட்டு வளாகத்தில் குழித்தோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன.

வீட்டின் உரிமையாளரினால் கழிவு தொட்டி ஒன்று அமைப்பதற்காக வீட்டின் பாவனையற்ற வாயில் முன்பாக குழியொன்றினை ஜெ.சி.பி உதவியுடன் இன்று (08) காலை வீட்டின் உரிமையாளர் தோண்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு
இதன் போது குறித்த குழியினுள் துப்பாக்கி மற்றும் ரவைகள் காணப்பட்டதையடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிஸார் ஆகியோர் துப்பாக்கி மற்றும் ரவைகளை மீட்டுள்ளனர்.

அதன் பின்னர் தடயவியல் பிரிவு பொலிஸார் பாகுப்பாய்வுகளை மேற்கொண்டிருந்தமையுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் 20வருடங்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டமையுடன் அவை ரி-56 ரகத்தினை சேர்ந்த இரு துப்பாக்கிகளும் 450க்கு மேற்பட்ட ரவைகளும் என தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுடன் அவற்றை கொழும்புக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.