;
Athirady Tamil News

ஹன்டா வைரஸ் பரவல் ஒரு பக்கம்… விலா எலும்பு நொறுங்கும் வாந்தியுடன் இன்னொரு கப்பல்

0

கரீபியன் பிரின்சஸ் எனும் சொகுசு கப்பலில் விலா எலும்பு நொறுங்கும் வாந்தியுடன் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நோரோவைரஸ் பாதிப்பு
நெதர்லாந்து கப்பல் ஒன்றில் பயணிகள் பலருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, உலக நாடுகள் பீதியடைந்துள்ள நிலையில், தற்போது நோரோவைரஸ் பாதிப்புடன் இன்னொரு கப்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் நொறுங்கும் அளவுக்குக் கடுமையான வாந்தியை ஏற்படுத்தக்கூடிய, மிக வேகமாகப் பரவும் ஒரு வயிற்றுத் தொற்று நோயாகும் நோரோவைரஸ்.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், கரீபியன் பிரின்சஸ் கப்பலில் இதுவரை சுமார் 102 பயணிகளும் 13 ஊழியர்களும் நோரோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Princess Cruises நிறுவனத்தால் இயக்கப்படும் அந்தக் கப்பல், ஏப்ரல் 28 அன்று புறப்பட்டு, தற்போது வடமேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது.

மொத்தம் 3,116 பயணிகள்
தற்போது டொமினிக்கன் குடியரசில் உள்ள புவேர்ட்டோ பிளாட்டாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அந்தக் கப்பலானது மே 11 அன்று, ஃப்ளோரிடாவில் உள்ள போர்ட் கானாவெரலுக்கு வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் மொத்தம் 3,116 பயணிகளும் 1,131 பணியாளர்களும் உள்ளனர். இந்த நிலையில், மே 7 ஆம் திகதி நோரோவைரஸ் பாதிப்பு தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரின்சஸ் குரூசஸ் நிர்வாகமும் அதன் பணியாளர்களும், சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் நடைமுறைகளை அதிகரித்துள்ளனர்; நோய்வாய்ப்பட்ட பயணிகளிடமிருந்து பரிசோதனைக்காக மல மாதிரிகளைச் சேகரித்துள்ளனர்; மேலும், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களையும் பயணிகளையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும், மே 11 அன்று போர்ட் கானாவெரலுக்கு வந்தடைந்ததும், கரீபியன் பிரின்சஸ் கப்பல் தனது அடுத்த பயணத்தைத் தொடங்குவதற்கு முன், விரிவான சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் பணிகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.