;
Athirady Tamil News

உக்ரைன் விவகாரம்: 30 கூட்டணி நாடுகள் முக்கிய ஆலோசனை!

0

உக்ரைனின் நெருங்கிய கூட்டணி நாடுகள் செவ்வாய்க்கிழமை(ஆக. 19) முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டன.

முன்னதாக, உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆக. 18 நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க, உக்ரைன், ஐரோப்பிய தலைவர்கள் வெள்ளை மாளிகையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதன் முடிவில், உக்ரைன் அதிபருடன் ரஷிய அதிபர் புதின் விரைவில் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதித்திருப்பதைத் தொடர்ந்து, இன்றைய சந்திப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், செவ்வாய்க்கிழமை(ஆக. 19) பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைமையில் உக்ரைனின் 30 கூட்டணி நாடுகளுடன் ஆலோசனை நடைபெறும் என்று இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்திருந்தார். காணொலி வழியாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.