தலைமுடியைப் பிடித்து இழுத்து… இஸ்ரேல் சிறையில் துன்புறுத்தப்படும் கிரெட்டா துன்பெர்க்
இஸ்ரேல் சிறையில் தாம் கடுமையாக நடத்தப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் ஸ்வீடன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
துன்புறுத்தப்படுவதாக
காஸா மக்களுக்கான உதவிகளை எடுத்துச் சென்ற flotilla படகுகளில் இருந்து கைது செய்யப்பட்ட கிரெட்டா துன்பெர்க் மற்றும் பலர் தற்போது இஸ்ரேல் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் சிறையில் தாம் துன்புறுத்தப்படுவதாக கிரெட்டா துன்பெர்க் ஸ்வீடன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, இஸ்ரேல் இராணுவம் அளித்த கொடி ஒன்றுடன் அவரது புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துன்பெர்க் எந்த நாட்டின் கொடியுடன் புகைப்படம் எடுக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனிடையே சிறையில் துன்பெர்கை சந்தித்த ஒரு ஸ்வீடன் அதிகாரி தெரிவிக்கையில்,
மூட்டைப்பூச்சிகள் நிறைந்த ஒரு அறையில் துன்பெர்க் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மிகக் குறைந்த அளவு உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே அவருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், அவருக்கு போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்படவில்லை. மேலும், மூட்டைப் பூச்சிகளால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகிப்பதாகவும் அவர் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல் அதிகாரிகள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும், பல மணி நேரம் தூங்காமல் விழித்திருக்கும் நிலையையும் துன்பெர்க் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, துன்பெர்க்குடன் கைது செய்யப்பட்ட ஆர்வலர்கள் இருவர் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
ஊர்வலம் நடத்தியதாக
இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கண்களுக்கு முன்பாக, அவர்கள் சிறுமி கிரெட்டாவை அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அடித்து, இஸ்ரேலியக் கொடியை முத்தமிட கட்டாயப்படுத்தினர்.
துருக்கி நாட்டவர் தெரிவிக்கையில், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக, துன்பெர்க்கு கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் அவர்கள் செய்தார்கள் என்றார். மேலும், இஸ்ரேல் கொடியுடன் துன்பெர்க்கை அவர்கள் ஊர்வலம் நடத்தியதாகவும் துருக்கி நாட்டவர்கள் தெரிவித்துள்ளார்.
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் 40க்கும் மேற்பட்ட படகுகளில் புறப்பட்ட 437 சமூக ஆர்வலர்களில் துன்பெர்க்கும் ஒருவர். காஸாவில் இஸ்ரேலின் 16 ஆண்டுகால கடல் முற்றுகையை உடைப்பதே இவர்களின் குறிக்கோளாக இருந்தது.
ஆனால், துன்பெர்க் உட்பட மொத்த ஆர்வலர்களையும் இஸ்ரேல் கடற்படை கைது செய்தது. அதில் துருக்கி நாட்டவர்கள் உட்பட சிலரை மட்டும் சனிக்கிழமை இஸ்ரேல் விடுவித்துள்ளது. துன்பெர்க் தற்போதும் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.