;
Athirady Tamil News

யாழில் தீயில் கருகிய வர்த்தக நிலையம்

0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உட்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு (15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

கடை உரிமையாளர் நேற்றையதினம் கடையினை பூட்டிவிட்டு சென்று, மீண்டும் இன்றையதினம் காலை வியாபார நடவடிக்கைகளுக்காக கடையினை திறந்துள்ளார்.

அதன்போது கடையின் உட்பகுதி முழுவதும் தீயில் எரிந்து அங்கிருந்த பொருட்கள் முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் மருதங்கேணி பொலிஸ் நிலையததில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.