;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல்; 14 பேர் கைது

0

கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்டவரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்த போது, அங்கிருந்தவர்கள், பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

சட்டவிரோத மணல் கடத்தல்
இதன்போது அங்கு முறுகல் நிலை ஏற்பட்டதுடன், காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 14 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்து கிளிநொச்சி காவல்துறையினரும், விசேட அதிரடிப் படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.